ஒடிசா ரயில் விபத்து – 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை தொடங்கிய நிலையில், 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் பாஹாநாகா ரயில் நிலையத்தில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அடையாள தெரியாத நபர்கள் மீது ரயில்வே சட்டம் 153, 154 மற்றும் 15 உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் அரசு ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

இதனிடையே, ஒடிசா மூன்று ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. 10 பேர் அடங்கிய குழு, விபத்து நடந்த பாஹாநாகா ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே வாரியத்தின் பரிந்துரைப்படி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விபத்து எப்படி நடந்தது என்பதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சைலேஷ் குமாரும் விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.