ராமேஸ்வரம் கோயிலில் நகைகள் எடை குறைந்ததால் 30 குருக்களுக்கு நோட்டீஸ்.!

ராமேஸ்வரம் கோயிலில் அம்மனுக்கு அணிவிக்கும் நகைகளின் எடை குறைந்ததால் 30 குருக்களுக்கு அபராத தொகையுடன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ பர்வத வர்த்தினி அம்மனுக்கு மாசி மாதம் திருவிழா, சித்திரை மாத திருவிழா, ஆடி மாத திருவிழா ஆகியவற்றிற்கு குருக்களால் அணிவிக்கப்படும் ஆபரண நகைகளை திருவிழா முடிந்த உடன் கோயில் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் பத்திரமாக குருக்களே வைத்து விடுவார்கள். 40 ஆண்டுகளுக்கு பின் கடந்தாண்டு நகை மதிப்பீட்டாளர்கள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர்.

அப்போது, அம்மனுக்கு அணிவிக்கும் ஆபரண நகைகளின் எடை குறைவாக உள்ளதாக கூறப்பட்டதை அடுத்து அபராத தொகையுடன் விளக்கம் கேட்டு நகைகளை அம்மனுக்கு சாத்தும் குருக்கள் மற்றும் ஓய்வு பெற்ற 30 குருக்களுக்கும் கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விதிக்கப்பட்டுள்ள அபராதம் 5,000 முதல் 10,00,000 வரை இருக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Tags: #Rameshwaram

Recent Posts

தமிழகத்தையே உலுக்கிய பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு ஒத்திவைப்பு.!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவி ஆஜராகாததால் தீர்ப்பை வருகிற 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக்…

3 mins ago

ஹரி இஸ் பேக்! தெறிக்கும் ரத்னம் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!

Rathnam : விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ரத்னம் படத்தின் ட்வீட்டர் விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம்…

10 mins ago

JAM 20024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள்… விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு.!

IIT JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியவில் மிகவும்…

14 mins ago

இழப்பைச் சந்தித்த டெக் மஹிந்திரா…6000 பேருக்கு வேலை? நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.!

Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல்…

48 mins ago

மக்களவை தேர்தல் – 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

Election2024: இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி வரை திரிபுராவில் அதிகபட்சமாக 36.42% வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல். மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட…

48 mins ago

தூங்கிக்கொண்டு இருந்த வாட்ச்மேன்! கேட் ஏறி விஜயகாந்த் செஞ்ச விஷயம்?

Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும்…

1 hour ago