ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.50% ஆகவே தொடரும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறுகையில் நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றவில்லை. தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் இருப்பதாகவும் கூறினார்.

உலக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதாலும் வெளிநாடுகளில் பணவீக்க விகிதம் குறையாது எனவும் குறிப்பிட்டார். மேலும், நமது பொருளாதாரம் சீரான வேகத்தில் தொடர்ந்து வளர்ந்து, உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக மாறி, உலக வளர்ச்சிக்கு 15% பங்களிக்கிறது எனவும் கூறினார்.