உலகின் முதலில் நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது..!

இந்தியாவில் புத்தாண்டு தொடங்க இன்னும் சில மணிநேரங்களே உள்ளன, ஆனால் உலகின் சில பகுதிகளில் புத்தாண்டு ஏற்கனவே தொடங்கிவிட்டது. நியூசிலாந்தில் முதலில் புத்தாண்டு தொடங்கியுள்ளதால், ஆக்லாந்து நகரில் புத்தாண்டை வரவேற்று அங்குள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் புத்தாண்டு பிறந்ததை தொடர்ந்து வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.