பஹத் பாசில் பிறந்தநாள் பரிசாக “விக்ரம்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.!

பஹத் பாசில் பிறந்த நாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் புதிய போஸ்டர்  வெளியிட்டு தனது வாழ்த்துக்களை லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

மலையாள சினிமாவில் பிரபல நடிகரான பஹத் பாசில் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்திலும், சூப்பர் டீலக்ஸ் படத்திலும் நடித்திருந்தார். தற்போது அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக புஷ்பா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து மீண்டும் தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மிரட்டலான தோற்றத்தில் கமலுடன் பஹத் பாசில்  இருந்ததால் ரசிகர்களுக்கு மத்தியில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியது.

இந்த நிலையில், இன்று நடிகர் பஹத் பாசில் 39- வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் ட்வீட்டரில் happybirthdayfafa என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

இதனையடுத்து இவரது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Recent Posts

வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை: நாளை வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்பதால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்து. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல…

10 mins ago

இன்று ப்ரோமோ நாளை முழு பாடல்.. ‘இந்தியன் 2’ படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்!

சென்னை: இந்தியன் 2 படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதல்…

45 mins ago

தமிழர்கள் மீது இத்தனை காழ்ப்பும்,வெறுப்பும் ஏன்.? பிரதமர் மோடி பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சென்னை : வாக்குகளுக்காக தமிழர்களை இழிவுபடுத்த வேண்டாம் பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். ஒடிசா மாநிலத்தில் (மே20) நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டபோது பிரதமர்…

1 hour ago

ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் எனக்கு பிடிக்கும் ! மனம் திறந்த ‘தல’ தோனி !!

சென்னை : சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி தனக்கு ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் புடிக்கும் என கூறி உள்ளார். ஐபிஎல் தொடரில் இந்த முறை…

1 hour ago

25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

சென்னை: அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்…

1 hour ago

குழந்தை ஆணா? பெண்ணா? சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்பான்..!

சென்னை: யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தது தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். உணவு சம்பந்தமான ர்வியூக்களை பதிவிட்டு வரும் பிரபல யூடியூபர் இர்பானின் மனைவி…

2 hours ago