சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாலையில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், அதிகாலையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை  தீவிரமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா பரிசோதனை சான்றிதழ்  மற்றும் இரண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை தவிர்த்து, நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு ஆர்டிபிசிஆர்  பரிசோதனை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், கடந்த நான்கு நாட்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 270 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் .