அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புங்க..சீனாவிடம் கெஞ்சிய மாலத்தீவு அதிபர்..!

பிரதமர் மோடி கடந்த வாரம் லட்சத்தீவு சென்றபோது இங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடி பதிவிற்கு விமர்சித்து கருத்துக்களை தெரிவித்தனர். இதனால் மாலத்தீவு அமைச்சர் 3 பேர் தற்காலிக பதவி நீக்கம்செய்யப்பட்டனர்.  இருப்பினும் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதால் “மாலத்தீவு புறக்கணியுங்கள்” என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலானது.

மேலும், மாலத்தீவுவிற்கு இந்தியர்களால் முன்பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் விமான டிக்கெட் ரத்து செய்து அந்த ஸ்கிரீன்ஷாட்களை தங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இதற்கிடையில், லட்சத்தீவை  ஊக்குவிக்கும் வகையில் பலரும் லட்சத்தீவுக்கு பயணிக்க தொடங்கினர். இதனால் மாலத்தீவு சுற்றுலா துறையை பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாள் அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். அங்கு பிஜின் மாகாணத்தில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் மாலத்தீவு அதிப கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ” சீனா எங்கள் நெருங்கிய நட்பு நாடு. கொரோனாவிற்கு பின் மாலத்தீவுக்கு சுற்றுலா வரும் பயணிகளில் முதல் இடத்தில் சீனா உள்ளது. இதனால், இந்த நிலை தொடர வேண்டும். சீனா எங்கள் நாட்டிற்கு மேலும் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்ப வேண்டும்” என கூறினார்.

பிரதமர் மோடி பற்றிய அவதூறு.! மாலத்தீவு அதிபர் பதவி விலக அந்நாட்டு முக்கிய தலைவர் வலியுறுத்தல்.!

நேற்று மாலத்தீவின் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மாலத்தீவு சுற்றுலா துறை வளர்ச்சிக்கு இந்திய நிலையான மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக இருந்து வருகிறது.கொரோனா தொற்றில் மாலத்தீவு  சுற்றுலாத்துறை விடுபட இந்திய பெரிதும் உதவியது. கடந்த ஆண்டில் மாலத்தீவு வருகை தந்த 17 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவிலிருந்து மட்டும் 2,09,198 பேர் வருகை தந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, 2,09,146 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும், 1,87,118 சீன சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.

மாலத்தீவு வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கைபடி 2023 ஆம் ஆண்டில் மாலத்தீவுக்கு வந்த சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 187118 ஆகும். இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 10 சதவீதமாகும். மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் இந்தியா கடந்த பல ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது” என தெரிவித்தது.