இன்று முதல் மதுரை – சிங்கப்பூர் இடையே மீண்டும் விமான சேவை – பயணிகள் மகிழ்ச்சி!

மதுரைசிங்கப்பூர் இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடக்கம்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

இந்நிலையில்,கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு இருந்த மதுரைசிங்கப்பூர் இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி,சிங்கப்பூர் நேரப்படி மாலை 5 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு மதுரை வந்தடையும்.அதைப்போல மதுரையிலிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு விமானம் சிங்கப்பூர் சென்றடைகிறது.

மேலும்,இன்று முதல் வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மதுரைசிங்கப்பூர் இடையே ஏர் இந்தியா விமானம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை-சிங்கப்பூர் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கி இருப்பது விமானப் பயணிகள் மத்தியில்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Recent Posts

தமிழிசை பற்றி அவதூறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி! கொந்தளித்த குஷ்பு!

குஷ்பூ : திமுக சேர்ந்த பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது உண்டு . அப்படி தான் தற்போது பாஜக முன்னாள் தலைவரும், தெலுங்கானா முன்னாள்…

12 mins ago

பிரபல மூத்த பத்திரிகையாளர் ஹர்பால்சிங் பேடி காலமானார்..!

ஹர்பால்சிங் பேடி: பிரபல மூத்த விளையாட்டு துறை பத்திரிகையாளரான ஹர்பால் சிங் பேடி டெல்லியில் காலமானார். விளையாட்டு பத்திரிகை துறையில் பிரபலமாய் இருந்த மூத்த பத்திரிகையாளரான ஹர்பால்சிங்…

15 mins ago

சத்தீஸ்கர் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.. பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மரணம்.!

நக்சலைட்டுகள்: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் மீது, நக்சல்கள் தாக்குதல் நடத்தும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், இன்று காலை அபுஜ்மத் வனப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 8…

38 mins ago

கறி குழம்பை மிஞ்சும் பலாக்கொட்டை குழம்பு..! செய்முறை ரகசியம் இதோ ..!

Jack fruit seed curry -கறி  குழம்பு சுவை போல பலாக்கொட்டை குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். செய்முறை; பலாக்கொட்டை =கால் கிலோ…

40 mins ago

அதிரிச்சியில் ரசிகர்கள்..!! கால்பந்து வீரர் மதிஜா சார்கிச் காலமானார்!!

மதிஜா சார்கிச் : கால்பந்து வீரரான கோல் கீப்பராக விளையாடி வரும் மதிஜா சார்கிச் உடல்நல குறைவால் காலமானார். இங்கிலாந்து நாட்டில் பிறந்த இவர் மாண்டினீக்ரோ தேசிய…

41 mins ago

உத்தராகண்ட் மாநிலத்தில் வேன் கவிழ்ந்து விபத்து! 8 பேர் பலி!!

உத்தராகண்ட் : மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஆற்றில் வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ரைடோலி அருகே ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் 23-க்கும்…

55 mins ago