#LSGvsGT: நடப்பு சாம்பியனுடன் மோதும் லக்னோ..! லக்னோ கோட்டையில் கொடியேற்றுமா குஜராத்..?

ஐபிஎல் 2023 தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. 

16-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளநிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மோதுகின்றன. இந்த போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இந்த சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ அணி இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. கடைசியாக ஜெய்ப்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 144 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வென்றது. இதில் மேயர்ஸ் சிறப்பாக விளையாடி, சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் அடித்து அரைசதம் அடித்தார்.

ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுகின்ற நடப்பு சாம்பியன் குஜராத் அணி, இதுவரை நடந்த 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. கடைசியாக ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் லக்னோ அணியும், 4 வது இடத்தில் உள்ள குஜராத் அணியும் இன்றைய போட்டியில் வென்று தங்களின் இடத்தை முன்னோக்கி நகர்த்தும் முனைப்பில் போராடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த போட்டியானது இன்னும் சிலமணி நேரத்தில் தொடங்கவுள்ளதால் இந்த இரு அணிகளில் எந்த அணி வென்று புள்ளிப்பட்டியலில் முன்னோக்கி நகரும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

குஜராத் vs லக்னோ : போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்களின் பட்டியல்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் :

கேஎல் ராகுல்(C), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன்(W), ஆயுஷ் படோனி, நவீன் உல் ஹக், அவேஷ் கான், யுத்வீர் சிங் சரக், ரவி பிஷ்னோய்

குஜராத் டைட்டன்ஸ் :

விருத்திமான் சாஹா(W), சுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (C), விஜய் சங்கர்/அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், முகமது ஷமி, மோகித் சர்மா/நூர் அகமது

Leave a Comment