LeoSuccessMeet: இந்த வாட்டி மிஸ் ஆகாது! குட்டி ஸ்டோரி சொல்ல காத்திருக்கும் தளபதி விஜய்!

லியோ படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் குட்டி ஸ்டோரியை கேட்க ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆகி இருக்கும் நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் பயங்கர கட்டுப்பாடுகளுடன் வெற்றி விழா இன்று (நவம்பர் 1) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கிறது.

அதன்படி, இந்த விழா நாளை மாலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் தளபதி விஜய் உட்பட சில முக்கிய பிரபலங்கள் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக இந்த விழாவுக்கு நடிகர் கமல் மற்றும் ரஜினிகாந்த் வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்வின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நடிகர் விஜய் ஏதேனும் குட்டி ஸ்டோரி சொல்லுவாரா என தளபதி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிருக்கிறார்கள். முன்னதாக, லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானது விஜய் ரசிகர்களை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இன்று மாலை நடைபெற இருக்கும் லியோ வெற்றி விழாவில் என்ன குட்டி ஸ்டோரி சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வழக்கம் போல் தனது பாணியில், “என் நெஞ்சில் குடியிருக்கும்” நண்பா- நம்பிகள் என்று தனது உரையை தொடங்க காத்திருக்கிறார்.

அஞ்சான் படத்தோட தோல்வியை சமாளிக்க ரொம்பவே கஷ்டப்பட்டேன்! இயக்குனர் லிங்குசாமி வேதனை!

இப்பொது, லியோ படம் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு ஒரு தரமான குட்டி ஸ்டோரி மூலம் பதிலடி கொடுத்து ரசிகர்கள் அனைவரையும் குஷிப்படுத்த போகிறார். இருந்தாலும் நாம் அந்த தருணத்திற்காக காத்திருக்க வேண்டும்.

நா ரெடி தான் பாடலுக்கு ஏஜென்ட் டினாவுடன் குத்தாட்டம் போடும் மடோனா! வைரலாகும் வீடியோ!

முன்னதாக, விஜய் பைரவா, தெறி படத்திலிருந்து இந்த குட்டி ஸ்டோரியை எடுத்துரைத்து வருகிறார். அந்த வகையில், விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரிகள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் குறிப்பிடத்தக்கது.

ரத்தம் தெறிக்க KFG-ல் மிரட்டும் சியான்! ‘தங்கலான்’ படத்தின் மிரட்டல் டிரைலர்!

எனினும் இந்த வெற்றி விழா நிகழ்ச்சியில் பங்கேற்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அப்போ யாருக்கு தான் அனுமதி என்று பார்க்கையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.