தேசிய கீதத்துடன் தொடங்கியது கேலோ இந்தியா தொடக்க விழா!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கவும் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவும் 3 நாள் பயணமாக இன்று மாலை பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு சென்ற பிரதமர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு விளையாட்டு மைதானத்துக்கு சென்றார்.

பிரதமர் மோடிக்கு வழி நெடுக பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழா நேரு ஸ்டேடியத்தில் தேசிய கீதத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், ஆளுநர் ஆர் என் ரவி, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கேலோ இந்தியா 2024.! எத்தனை வீரர்கள்.? எத்தனை பதக்கங்கள்.? முழு விவரம் இதோ…

அதுமட்டுமில்லாமல், தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். கேலோ இந்தியா தொடக்க விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்டவர்களுக்கு அரசு சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதன்பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு உரையாற்றினார். தற்போது மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் உரையாற்றி வருகிறார். எனவே, இன்னும், சற்று நேரத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.