அறிமுக தொடரிலேயே காஷ்மீர் வீரர் உம்ரான் மாலிக் சாதனை..!

நேற்று உம்ரான் மாலிக் வீசிய பந்து 153 கி.மீ வேகத்தில் வீசி சாதனை படைத்துள்ளார்.

உம்ரான் மாலிக் கொல்கத்தா அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து, நேற்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் கவனத்தை ஈர்த்தார். 4 ஓவர்கள் வீசிய உம்ரான் மாலிக் 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

நேற்றைய போட்டியில் தனது முதல் ஓவரில் ஒரு ரன் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி பெங்களூரு அணியை திணற செய்தார். நேற்று அவர் வீசிய பல பந்துகள் 150 கி.மீ வேகத்தில் வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து, 9-ஆவது ஓவரில் படிக்கலுக்கு வீசிய பந்து 153 கி.மீ வேகத்தில் சென்றது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் போட்டியில் அதிக வேகத்தில் பந்து வீசியவர் என்ற சாதனையை உம்ரான் மாலிக் பெற்றுள்ளார்.

போட்டியின் முடிந்த பிறகு பேசிய விராட் கோலி உம்ரன் மாலிக்கின் பந்துவீச்சை  பாராட்டினார். உம்ரான் ஜம்மு காஷ்மீரரை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.