மன்மோகன் சிங்கை சக்கர நாற்காலியில் மாநிலங்களவையில் கலந்து கொள்ள வைத்தது வெட்கக்கேடானது..! பா.ஜ.க

நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற மாநிலங்களவையில் டெல்லி நிர்வாக மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் 90 வயதான முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், உடல்நலக்குறைவு இருந்தபோதிலும் மாநிலங்களவையில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கலந்து கொண்டார்.

மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் அமர்ந்து இருக்கும் புகைப்படமானது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபாவில் சக்கர நாற்காலியில் கலந்துகொள்ள வைத்த காங்கிரஸை விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸின் இந்த பைத்தியக்காரத்தனத்தை நாடு நினைவில் கொள்ளும். இப்படி உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில் கூட, காங்கிரஸ் ஒரு முன்னாள் பிரதமரை நாடாளுமன்றத்தில் சக்கர நாற்காலியில் அமர வைத்தது. இது மிகவும் வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளது.