பிரதமர் மோடியை நோக்கி பறந்து வந்த செல்போன்.! விசாரணையில் கிடைத்த புதிய தகவல்.!

மைசூரில் பிரதமர் மோடி மீது செல்போன் வீசபட்ட சம்பவம் வேண்டும் என்று நிகழ்த்தப்படவில்லை என்றும், பாஜக தொண்டர் ஆர்வ மிகுதியில் பூக்களுக்கு பதில் வீசிவிட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஒருவார காலமே இருப்பதால் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடியும் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொன்டு வருகிறார்.

நேற்று, மைசூர் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் பிரதமர் மோடி ஊர்வலமாக தனது பிரச்சாரத்தினை மேற்கொண்டார். அப்போது, சிக்ககடியாலா பகுதியில் பிரதமர் மோடி வாகனம் சென்று கொண்டு இருக்கையில், தொண்டர்கள் இப்பக்கம் இருந்தும் பூக்கள் வீசினர். அப்போது ஒரு செல்போன் பறந்து வந்து வாகனம் மீது விழுந்தது.

இந்த செல்போன் பிரதமரைநோக்கி வீசப்பட்டதா ? பாதுகாப்பு குறைபாடா என பல்வேறு கேள்விகளை இந்த செல்போன் வீச்சு சம்பவம் எழுப்பியது. இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும் யார் செல்போனை வீசியது என்றும், தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் பாதுகாப்பு அதிகாரிகள் செய்த தீவிர சோதனையில் செல்போன் வீச்சு என்பது வேண்டுமென்றே பிரதமரை நோக்கி வீசப்படவில்லை என்றும், பாஜக தொண்டர் ஒருவர் தான் பூக்களை வீசும்போது பிரதமரை பார்த்த மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பூக்களோடு தவறுதலாக செல்போனையும் சேர்த்து வீசிவிட்டார் என்று தகவல் கிடைத்துள்ளது. இருந்தும், பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.