பிரதமரை புறக்கணிக்கும் முதல்வர்.? தெலுங்கானா அரசியல் நிலவரம்.!

தெலுங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் அரசு விழாவினை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி இன்று தெலுங்கானாவில் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை துவங்கி வைக்க ஹைதிராபாத் வரவுள்ளார். அதன் பிறகு செகிந்திராபாத் முதல் திருப்பதிக்கு இடையாயான வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்கிறார்.

முதல்வர் புறக்கணிப்பு :

தெலுங்கானாவில் அரசு விழாவில் பங்கேற்க வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க ஆளும் மாநில அரசு சார்பில் முதலவர் சந்திரசேகர ராவ் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் பிரதமர் வரவேற்பு மற்றும் பிரதமர் கலந்து கொள்ளும் அரசு நிகழ்வு ஆகியவற்றில் கலந்து கொள்ளபோவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு :

தமிழகத்தை போலவே, தெலுங்கானாவும் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான நிலைபாட்டிலேயே இருக்கிறது. மேலும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா மீது டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment