களைக்கட்ட தயாராகும் ஈஷா மஹாசிவராத்திரி – இசை கலைஞர்களின் விவரங்கள் இதோ!

உலகளவில் புகழ்பெற்ற ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டும் பல்வேறு மாநில கலைஞர்களுடன் களைக்கட்ட தயாராகிவிட்டது.

பல பிரபல தமிழ் படங்களில் சிறந்த பாடல்களை பாடிய பின்னணி பாடகர் திரு. ஷான் ரோல்டன் இந்தாண்டு ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் பாட உள்ளார். திரை பாடல்கள் மட்டுமின்றி கர்நாடக இசை சங்கீதத்திலும் அவர் கரைக்கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு தன் கம்பீர குரலால் சிவனை போற்றி பாடல்கள் பாடி மக்களை கவர்ந்த தெலுங்கு பாடகி திருமதி.மங்கலி இந்தாண்டும் இன்னிசையை வழங்க உள்ளார்.மேலும், பாலிவுட் திரை உலகில் பல பக்தி பாடல்களை பாடியுள்ள பின்னணி பாடகர் திரு.மாஸ்டர் சலீமும் இவ்விழாவில் பாட உள்ளார்.அவர் பஞ்சாபி மொழியிலும்,சூஃபி இசையிலும் இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

அசாமின் புகழ்பெற்ற பின்னணி பாடகர் திரு. பப்பான் (Papon) ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த பாடகர் திரு.ஹன்ஸ்ராஜ் ரகுவன்சியும் தங்களின் இசை அர்ப்பணிப்பை வழங்க உள்ளார்.இதுதவிர,ஈஷாவின் சொந்த இசை குழுவான ’சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா’ வும், ஈஷா சம்ஸ்கிருதி குழுவினரும் தங்கள் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை அர்ப்பணிக்க உள்ளனர்.

இவ்வாறு,தமிழ்நாடு,ஆந்திரா,பஞ்சாப்,ஹிமாச்சல் பிரதேஷ்,அசாம் என பல மாநில கலைஞர்களுடன் ஈஷா மஹாசிவராத்திரி விழா களைக்கட்ட உள்ளது.இவ்விழா கோவை ஈஷாவில் மார்ச் 1-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ளது.சிவனின் அருள் நிறைந்த இரவு என அழைக்கப்படும் மஹாசிவராத்திரி அன்று மக்களை இரவு முழுவதும் விழிப்பாகவும்,விழிப்புணர்வாகவும் வைத்திருப்பதற்காக இத்தகைய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்விழா தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி,மராத்திஉள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் யூ- டியூப் சேனல்களில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.மக்கள் தங்கள் இல்லங்களில் பாதுகாப்பாக இருந்தப்படியே நேரலையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கடந்தாண்டு ஈஷா மஹாசிவராத்திரியின் நேரலை உலக அளவில் புகழ்பெற்ற கிராமி விருது வழங்கும் விழாவையே முந்தி அதிக பார்வைகளை பெற்று உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

IPL2024: ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற கொல்கத்தா..!

IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…

4 hours ago

லைசன்ஸ் பெற இனி RTO ஆபீஸுக்கு செல்ல வேண்டாம்.. ஜூன் 1 முதல் புதிய விதி அறிமுகம்.!

சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…

8 hours ago

‘நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்’ – பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்கும் ஹர்பஜன் சிங்!

சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…

8 hours ago

படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் பண்ணனும்! பலே திட்டம் போட்ட ரஜினிகாந்த் !

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…

8 hours ago

அடுத்த டார்கெட் கோப்பா அமெரிக்கா தான் !! மெஸ்ஸி ரசிகர்களுக்கு குட் நியூஸ் ..!

சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…

9 hours ago

குருவின் பரிபூரண அருள் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது..!

குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக…

9 hours ago