#IPLBreaking: குஜராத் அணி அபார வெற்றி… 4-வது முறையாக வீழ்ந்த லக்னோ.!

ஐபிஎல் தொடரில் இன்றைய GT vs LSG போட்டியில் 56 ரன்கள் வித்யாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

16-வது ஐபிஎல் தொடரின் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி குஜராத் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர்கள் சாஹா(81 ரன்கள்) மற்றும் கில்(94*ரன்கள்) அதிரடியாக விளையாட, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது. இதையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியில் மயர்ஸ்(48 ரன்கள்) மற்றும் டி காக்(70 ரன்கள்) நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர்.

இதன்பிறகு களமிறங்கிய வீரர்களான ஸ்டோனிஸ்(4), ஹூடா(11), பூரன்(3) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் மிகப்பெரிய ஸ்கோரை துரத்திய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 171/7 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

சிறப்பாக பந்துவீசிய மோஹித் சர்மா 4 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் 4-வது முறையாக வென்றுள்ளது.