ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் – அட்டவணை வெளியீடு.!

ஐபிஎல் தொடரின் பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கான அட்டவணை வெளியீடு.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு அணியும் தலா 6 போட்டிகளை விளையாடி உள்ளது. இதுவரை, 29 லீக் போட்டிகள் முடிவடைந்து உள்ளது. இந்த முறை உள்ளூர் மற்றும் வெளியூர் மைதானத்தில் போட்டி நடப்பதால் மேலும் சுவாரசியமாக உள்ளது. இந்த நிலையில், 16வது சீசன் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கான அட்டவணையை வெளியாகியுள்ளது.

பிசிசிஐ வெளியிட்டுள்ள அட்டவணையில், லீக் போட்டி முடிந்து குவாலிபையர் 1 மே 23-ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறும். அதைத் தொடர்ந்து மே 24-ஆம் தேதி எலிமினேட்டர் போட்டியும் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெரும் அணி அடுத்த இரண்டு இடங்களில் வெற்றி பெரும் அணியுடன் அரை இறுதி போட்டியை எதிர்கொள்ளும்.

அந்தவகையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே 26ம் தேதி குவாலிபையர் 2 போட்டி அதாவது அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. மே 28ம் தேதி அதே மைதானத்தில் ஐபிஎல் 2023 16ஆவது சீசனின் இறுதிப் போட்டி நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment