IPL 2023 : விறுவிறுப்பான இன்றைய போட்டி..! மும்பை கோட்டையில் கொடியை பறக்கவிடுமா கொல்கத்தா..?

ஐபிஎல் 2023 தொடரில் மும்பையில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. 

16-வது சீசன் ஐபிஎல் தொடர் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கும் 22-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெற உள்ளது.

ரோஹித் சர்மா தலைமையில் விளையாடும் மும்பை அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வியடைந்தும் 4 புள்ளிகள் எடுத்து 9-வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் மும்பை அணி, டெல்லி அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். இறுதி கட்டத்தில் டிம் டேவிட் மற்றும் க்ரீன் சிக்ஸர்களை பறக்க விட, மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே மும்பை அணியின் முதல் வெற்றி ஆகும்.

கொல்கத்தா அணி, நிதிஷ் ராணா தலைமையில் விளையாடிய 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் ஹைதராபாத் அணியுடனான கடைசி போட்டியில் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதுவரை மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் மும்பை 22 போட்டியிலும், கொல்கத்தா 9 போட்டியிலும் வென்றுள்ளது.

இன்றைய போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மும்பை vs கொல்கத்தா : போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்களின் பட்டியல்.

மும்பை இந்தியன்ஸ் :

ரோஹித் ஷர்மா (C), இஷான் கிஷன் (W), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கேமரூன் கிரீன், நேஹால் வதேரா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித்/ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஷத் கான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :

ஜேசன் ராய், என் ஜெகதீசன் (W), நிதிஷ் ராணா (C), ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், சுயாஷ் சர்மா, லாக்கி பெர்குசன்/டிம் சவுத்தி, வருண் சக்கரவர்த்தி

Leave a Comment