Categories: Uncategorized

IPL 2018:விராட் கோலியை பார்த்து வாயைப் பிளந்த மனைவி !எதுக்கு தெரியுமா?

விராட் கோலி பிடித்த கேட்ச்  மும்பை அணிக்கு எதிரான போட்டியில் போட்டியின் முடிவையே மாற்றியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் கோலி அற்புதமான ஒரு கேட்ச் பிடித்தார். ஆனால், அந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. நேற்றைய போட்டியில் கோலி பிடித்த கேட்ச் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அமைந்தது.

மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான நேற்று முன்தினம் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. எளிதான இலக்கு என்ற போதும், மும்பை வீரர்கள் தொடக்கத்திலே அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 50 ரன்களுக்குள் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இக்கட்டான நிலையில் இருந்த அணியை மீட்க தனி ஆளாக ஹர்திக் பாண்டியா போராடினார். மிகவும் நிதானமாக விளையாடிய பாண்டியா அவ்வவ்போது சிக்ஸகளையும் விளாசினார். மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் 41 பந்துகளில் 50 ரன்கள் அடித்த நிலையில் ஹர்திக் பாண்டியா இருந்தார். பாண்டியா களத்தில் இருந்ததால் மும்பை அணி ரசிகர்கள் சற்றே நம்பிக்கையுடன் இருந்தனர். 4 சிக்ஸர்கள் அடித்து மேஜிக் செய்வார் என்று நினைத்தார்கள்.

கடைசி ஓவரை சவுத்தி வீசினார். முதல் பந்தை பாண்டியா தூக்கி அடிக்க, அது லாங் ஆன் திசையில் இருந்த கோலியிடம் சென்றது. பந்து சற்றே முன்னே இறங்கிவிட அதை தாவி பல்டி அடித்து கோலி பிடித்தார். கொல்கத்தா அணிக்கு எதிராக அவர் பிடித்தது போன்றே இது சூப்பரான கேட்ச் தான். கோலி கேட்ச் பிடித்ததை கேலரியில் இருந்து பார்த்த அவரது மனைவி அனுஷ்கா மகிழ்ச்சியில் திளைத்தார். பாண்டியா ஆட்டமிழந்ததும் மும்பை அணியின் தோல்வி உறுதியானது. பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி தனது 3வது வெற்றியை பதிவு செய்த போது, இந்த தொடரில் 5வது இடத்தில் தான் உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

6 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

9 hours ago

ஊழல்வாதி என நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்..! பிரதமர் மோடி ஆவேசம்.!

சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…

12 hours ago

டெல்லி மதுபான கொள்கை வழக்கு.! குற்றப்பத்திரிகையில் முதன் முதலாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர்.!

சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…

12 hours ago

பைக் பஞ்சர் ஆச்சுன்னா அஜித் என்ன செய்வாரு தெரியுமா? என்னங்க இந்த விஷயத்தை நம்பவே முடியல!!

சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…

13 hours ago

மின்சரம் தாக்கி செயலிழந்த சிறுவனின் இதயம்.. நொடி பொழுதில் உயிரை மீட்ட மருத்துவர்.! வைரல் வீடியோ..

சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…

13 hours ago