IPL 2018:சென்னைக்கு இமாலைய இலக்கு …!ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய கொல்கத்தா வீரர் ரசல் 36 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து அசத்தல்….!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் டி20 போட்டியில் முதலில் தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா அணியை டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட் செய்ய அழைத்தார்.

சென்னை அணியில் முரளி விஜய் இல்லை, சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். மார்க் உட் இல்லை அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் வந்துள்ளார்.

முதல் ஓவரை தீபக் சாஹர் வீச முதல் பந்தையே பளார் என்று ஆஃப் திசையில் அறைந்தார் கிறிஸ் லின், நான்குக்குப் பறந்தது.

பிறகு கடைசி 2 பந்துகளில் சுனில் நரைன் லெக் திசையில் இரண்டு மிகப்பெரிய சிக்சர்களைத் தூக்க முதல் ஓவரிலேயே 18 ரன்கள்! அடுத்த ஓவரை ஹர்பஜன் சிங்கிடம் தோனி கொடுக்க சுனில் நரைனுக்கு கொஞ்சம் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீச அதை ஒரே சுற்று சுற்றினார் நரைன் பந்து சரியாகச் சிக்காமல் ரெய்னா கேட்சைப் பிடித்தார்.இதனையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரஸல் 36 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment