சர்வதேச தடகள போட்டிகள் 2022 : அமெரிக்காவுக்கு முதலிடம்.! இந்தியாவுக்கு ஒரே ஒரு பதக்கம்….

உலக தடகள சாம்பியன்ஷிப் 2022 தரவாரிசை பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 33வது இடத்தில் உள்ளது. 

அமெரிக்காவில் உலக அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  இதில் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இதில், உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து தடகள வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டு உள்ளனர். பதக்கங்களையும் பெற்று வருகின்றனர்.

அதில், தற்போது வரையிலான பதக்கபட்டியல் தரவரிசை வெளியாகியுள்ளது. அதில் முதலிடத்தில் அமெரிக்கா 13 தங்கம், 9 வெள்ளி உடன் முதலிடத்தில்  உள்ளது. 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களுடன் எத்தியோப்பியா 2ஆம் இடத்தில் உள்ளது.

ஜமைக்கா மூன்றவது இடத்திலும், கென்யா, சீனா, ஆஸ்திரேலியா, பெரு மற்றும் போலந்து ஆகிய நாடுகளும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்தியா ஒரு வெள்ளி பதக்கத்துடன் 33வது இடத்தில் இருக்கிறது.

Leave a Comment