1.8 மில்லியன் N95 முக்கவசங்களை அமெரிக்காவிற்கு நன்கொடையாக வழங்கியது – இந்தியா

1.8 மில்லியன் N95 முக்கவசங்களை அமெரிக்காவிற்கு நன்கொடையாக இந்தியா வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள மிகப்பெரிய நகரமான பிலடெல்பியாவிற்கு இந்தியா சுமார் 1.8 மில்லியன் N95 முக்கவசங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவுகிறது. பிலடெல்பியாவின் மேயர் ஜிம் கென்னி, நகரின் முன்னணி தொழிலாளர்களுக்கு பயன்படுத்த முக்கவசங்களை வழங்குமாறு இந்தியாவுக்கு கோரிக்கை வைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்துதனது டிவிட்டர் பக்கத்தில், “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவுவதற்காக பிலடெல்பியா இந்தியாவில் இருந்து 1.8 மில்லியன் N95 முக்கவசங்களை பெறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.