கின்னஸ் சாதனை படைத்த காளை! காரணம் இதுதானா?

கின்னஸ் சாதனை படைத்த நீளமான கொம்புகளை உடைய காளை.

அமெரிக்காவை சேர்ந்த காளை ஒன்று, உலகிலேயே மிக நீளமான கொம்புகளை கொண்டுள்ளது. இந்த காளை தற்போது கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த காளையின் கொம்புகள் 8 அடி நீளம் கொண்டவை.

இந்நிலையில், உலக கின்னஸ் சாதனை தினமாக, நவம்பர் 18-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், கின்னஸ் சாதனை  பெறுவோரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, உலகிலேயே நீளமான கால்களை கொண்டுள்ளதாக, 17 வயது சிறுமி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதனை தொடர்ந்து, ‘cowboy tuff chex’ என்ற காளை நீண்ட கால்களை கொண்டுள்ளதாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இந்த காளையை, கடந்த 2017-ம் ஆண்டு, ரிச்சர்ட் மற்றும் ஜின் பிலிப் ஆகிய கால்நடை பண்ணையாளர்கள் ஏலத்தில் எடுத்து வளர்த்து வருகின்றனர். இதன் நீள கொம்புகளை பாதுகாப்பதற்காவே தனி வாகனமும்  வாங்கியுள்ளனர். இந்த காளையை பொதுமக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.