தொடக்க வீரர்கள் காட்டடி.! பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்து பைனலுக்கு சென்ற இந்திய அணி .!

  • முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே அடித்தனர்.
  • பின்னர் இறங்கிய இந்திய அணி 35.2 ஓவரில் 176 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு சென்றது.

தென் ஆப்ரிக்காவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம்  இன்று செமி-பைனல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது.

இப்போட்டி  போட்செஃப்ஸ்ட்ரூமில் உள்ள  சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே அடித்தனர்.

Image

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹைதர் அலி (56), ரோஹைல் நசீர் (62) ரன்கள் அடித்தனர். இந்திய அணியில் சுஷாந்த் மிஸ்ரா 3 விக்கெட்டும் , கார்த்திக் , ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

Image

173 ரன்கள் இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷ்வி ஜெய்ஸ்வால் ,
திவ்யான்ஷ்  இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினார். இவர்கள் இருவரின் கூட்டணியை பிரிக்கமுடியாமல் பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்கள் திணறினர்.

இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் யஷ்வி ஜெய்ஸ்வால்(105*), திவ்யான்ஷ்(59*) ரன்களுடன் இருந்தனர். இதனால் இந்திய அணி 35.2 ஓவரில் 176 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு சென்றது.பைனல் போட்டி வருகின்ற 09-ம் தேதி நடைபெற உள்ளது.