இந்தியா இதனை செய்தால் உலக கோப்பை தொடருக்கு இந்தியாவிற்கு வரமாட்டோம்.! முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பேச்சு!

அனைத்து நாடுகளும், பாகிஸ்தானில் வந்து விளையாடும் போது பிசிசிஐ க்கு என்ன பிரச்சனை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அன்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தானில் 2023 ஆம் ஆண்டு நடைபெறும் ஆசியக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானுக்கு செல்லுமா என்று பேசப்பட்டு வந்த நிலையில் பாகிஸ்தானுக்கு, இந்தியா செல்லாது என்று பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு பொதுவான இடங்களில் நடந்தால் இந்தியா பங்கேற்கும் என்றும் பாகிஸ்தானில் நடந்தால் இந்தியா பங்கேற்காது என்றும்  ஜெய் ஷா மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அன்வர், அனைத்து நாடுகளும் பாகிஸ்தான் வரும் போது இந்தியாவிற்கு என்ன பிரச்சனை என்று பிசிசிஐக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக்கோப்பையில் இந்தியா பங்கேற்காவிட்டால் இந்தியாவில் 2023 இல் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானும் பங்கேற்காது என்று அன்வர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு பொதுவான இடங்களில் உலகக்கோப்பை தொடர் நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் பங்கேற்கும் என்று அன்வர் மேலும் கூறியுள்ளார்.

Recent Posts

மீண்டும் ரூ.55,000- ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு.!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…

11 mins ago

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை ! ஒப்பு கொண்ட மும்பை கேப்டன் !

சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…

45 mins ago

திருமணத்திற்காக ஷாப்பிங் சென்ற போது பயங்கர விபத்து.. 6 வயது சிறுவன் உள்பட 5 பலி.!

சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…

54 mins ago

ரூ.5 லஞ்சம் வாங்கிய கம்பியூட்டர் ஆபரேட்டர்.! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி  ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…

1 hour ago

கெஜ்ரிவால் வீட்டில் நடந்தது என்ன.? ஆம் ஆத்மி விளக்கமும்.. ஸ்வாதி மாலிவால் பதிலும்…

சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…

1 hour ago

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

2 hours ago