சினிமா

120 ரூபாய்ல கோபுரம் கட்ட போறது இல்ல..படம் பிடிக்கலையா உங்களோட வெச்சுக்கோங்க- எம்.எஸ்.பாஸ்கர்!!

எம்.எஸ்.பாஸ்கர் : பார்க்கிங் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘லாந்தர்’ என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான இசைவெளியீட்டு விழா சென்னையில், நடைபெற்றது. இந்த இசைவெளியீட்டு விழாவில் விதார்த், கனல் கண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ரவிக்குமார், செல்ல அய்யாவு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ்.பாஸ்கர் ” நான் சொல்ல வருவது ஒரே ஒரு விஷயம் தான் அது என்னவென்றால், நீங்கள் ஒரு படத்தை பார்க்கிறீர்கள் அந்த படம் உங்களுக்கு பிடிக்கிறது என்றால் அதனை 4 பேரிடம் சொல்லி மகிழுங்கள். அப்படி அந்த படம் பிடிக்கவில்லை என்றால் அதனை உங்களோடு வைத்து கொள்ளுங்கள். அதனை விட்டுவிட்டு படத்திற்கு போகும் அடுத்தவர்களை படம் மொக்கை போகவேண்டாம் என்று சொல்லாதீர்கள்.

இதனை நான் எதற்காக சொல்கிறேன் என்றால் ஒரு படத்தை எடுப்பதற்கு எவ்வளவு பேர் உழைக்கிறார்கள் எவ்வளவு பேர் கஷ்டபடுகிறார்கள் என்று அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். எவ்வளவோ பேர் படப்பிடிப்பில் ஏற்படும் விபத்தில் சிக்கி கொள்கிறார்கள். ஒரு படத்தை எடுப்பதில் அந்த மாதிரி பல கஷ்டங்கள் இருக்கிறது. அந்த மாதிரி கஷ்ட்டப்பட்டு எடுக்கப்படும் படங்களை பார்த்துவிட்டு நல்லா இல்லை என்று சொல்லாதீர்கள்.

படம் பிடிக்கிறது என்றால் கொண்டாடுங்கள். படம் அப்படி பிடிக்கவே இல்லை என்றால் பேசாம இருந்து விடுங்கள். எல்லோரும் படத்தை பார்க்கட்டும். படம் பார்க்க செலவு செய்யும் 120 , 200 ரூபாயில் நாம் கோபுரம் கட்ட போறது இல்ல. ஆனால், நல்லா இருக்கும் படங்களுக்கும், நல்லா இல்லாத படங்களுக்கும் நீங்கள் வருகை தந்து பார்த்தால் பல குடும்பங்கள் வாழும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

நிறைய பேர் என்னிடம் சிறிய படங்கள் செய்கிறீர்கள் பெரிய ஹீரோக்களின் படங்களில் ஏன் நடிப்பது இல்லை என்று.  நான் நடிக்க தயாராக தான் இருக்கிறேன். ஆனால், ஒண்ணே ஒன்னு சொல்லி கொள்ள விரும்புகிறேன். சிங்கத்திற்கு வாலாக இருப்பதை விட ஈக்கு தலையாக இருக்க ஆசைப்படுகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

அவருக்கு பாரத ரத்னா கொடுக்கணும்..! இந்திய அரசுக்கு சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் அவர் மிட்-டே பக்கத்தில் எழுதிய கட்டுரையில் இந்திய அணியின் பயிற்சியாளருக்கு பாரத் ரத்னா விருது வழங்க…

4 hours ago

இந்த டிகிரி முடிச்சுடீங்களா? அப்போ இந்த அரசாங்க டேட்டா என்ட்ரி வேலை உங்களுக்கு தான்..!

சிவகங்கை : மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலத்தில் ஆடியோலஜிஸ்ட்/ஸ்பீச் தெரபிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ரேடியோகிராபர்,…

5 hours ago

2 நாள் பயணமாக ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.!

பிரதமர் மோடி : மூன்று நாள் அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இன்று காலை ரஷ்யா புறப்பட்டார். அங்கு, புதின் உள்ளிட்டோரை…

5 hours ago

மிரட்டும் சண்டை…தெறிக்கும் வசனங்கள்…வெளியானது வணங்கான் டிரைலர்!

வணங்கான் : சூர்யா நடித்து வந்து பாதியில் விலகிய 'வணங்கான்'  படம் அப்டியே டிராப் ஆகிவிடும் என செய்திகள் வெளியான நிலையில், இயக்குனர் பாலா நடிகர் அருண்…

5 hours ago

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் : ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்.!

விழுப்புரம்: நாளை மறுநாள் (ஜூலை 10) விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. விழுப்புரம் மாவட்டம்…

5 hours ago

உங்க வீட்ல பல்லி தொல்லை அதிகமா இருக்கா? அப்போ இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

Lizard- பல்லியை வீட்டிலிருந்து முழுமையாக விரட்டி அடிக்க கூடிய டிப்ஸ்களை இங்கே காணலாம். நம்மில் பலருக்கும் பாம்பை விட பல்லிக்கு  தான் அதிகம் பயம் இருக்கும். இதனால்…

5 hours ago