ஒடிசாவில் இன்று முதல் தொடங்குகிறது ஹாக்கி உலகக்கோப்பை..!

ஒடிசாவில் இன்று முதல் எஃப்ஐஎச் (சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு-FIH) ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் தொடங்குகிறது.

எஃப்ஐஎச் (FIH) ஹாக்கி உலகக் கோப்பையை நடத்த இந்தியா தயாராகி வரும் நிலையில் ஒடிசாவில் இன்று முதல் போட்டிகள் தொடங்க உள்ளது. ஜனவரி 13 முதல் ஜனவரி 29 வரை உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் நீல நிற புல்தரையில் விளையாடப்படவுள்ளது.

15வது ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்திலும், ரூர்கேலாவின் புத்தம் புதிய பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்திலும் நடைபெற உள்ளது. மார்க்யூ (marquee) நிகழ்ச்சிக்காக மைதானங்களை மேம்படுத்தவும் நகரங்களை அழகுபடுத்தவும் ஒடிசா 1000 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது.

இந்த நீல தரை புல்வெளி மேற்பரப்பு 2012 லண்டன் ஒலிம்பிக்கில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹாக்கியின் தீவிர ரசிகர்களை இது எரிச்சலூட்டும் வைகையில் இருந்தாலும் புதிய பார்வையாளர்களை கவர்ந்தது. இன்று நீல நிற விளையாட்டு மேற்பரப்பு ஹாக்கி வீரர்கள் மற்றும் ரசிகர்களால் பாராட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment