வரலாற்றில் இன்று(18.01.2020)… பொது உடைமை சிங்கம் ஜீவானந்தம் மறைந்த தினம் இன்று..

  • பொது உடைமை சித்தாந்தத்தின் நாயகன், சுயமரியாதை சிங்கம் ஜீவாவின் பிறந்த தினம் இன்று.
  • இந்நாளில் இவரை நினைவு கொள்வோம்.

ஆகஸ்ட் மாதம்  21தேதி  1907ம் ஆண்டு முதல்  ஜனவரி மாதம் 18 தேதி 1963 ஆண்டு வரை ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு பல்வேறு  தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ப. ஜீவானந்தம் ஆவார். இவர் ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையிலேயே கழித்தார். இவர் ஒரு காந்தியவாதியாகவும், சுயமரியாதை இயக்க வீரராகவும், தமிழ்ப் பற்றாளராகவும், அனைத்திற்கும் மேலாக சிறந்த ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர்.இவர்  தம்மை ஒரு நாத்திகராக அறிவித்துக் கொண்டவர். ப. ஜீவானந்தம் கலை இலக்கிய உணர்வுள்ள  பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர்.

மேலும் இவர் குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மகாகவி பாரதியாரின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த நயமிக்க பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளார். இந்தியாவிலே பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர். மேலும் இவர், கேரளாவின் வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்ற போராட்டங்களில்  பங்கேற்றவர் ஆவர். இவர் கடந்த 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு  தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவர். அனைத்து மக்களாலும் ஜீவா என்று அன்போடு அழைக்கப்படும் இவர் மறைந்த தினம் இன்று.

Recent Posts

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

6 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

6 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

12 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

12 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

13 hours ago

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…

13 hours ago