ஹேமந்த் சோரனின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!

Hemant Soren: ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

நில அபகரிப்பு வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி இரவு அமலாத்துறையால் கைது செய்யப்பட்டு ராஞ்சியில் உள்ள முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கைது முன்பாகவே தனது முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோர ராஜினாமா செய்திருந்தார்.

எனவே, நில மோசடி வழக்கில் கைதான ஹேமந்த் சோரன் உட்பட 5 பேர் மீது ஜார்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதாவது இவ்வழக்கு தொடர்பான விசாரணை நேற்று தொடங்கிய நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, முறைகேடாக ரூ.31.07 கோடி மதிப்புள்ள நிலத்தை பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தனது குற்றசாபத்திரிகையில் குற்றசாட்டியுள்ளது. இந்த நிலையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான ரூ.31 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சிறையில் உள்ள ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த சொத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஹேமந்த் சோரன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.