சினிமா

வந்துட்டாருயா வந்துட்டாரு! மிரட்டல் லுக்கில் லெஜண்ட் அண்ணாச்சி! மிரண்டு போன ரசிகர்கள்!

லெஜண்ட் சரவணன் : ‘அண்ணாச்சி பெயரை கேட்டாலே சும்மா அதிருத்துள்ள’ என்பது போல  சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் ஹீரோவாக படங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். இவருடைய முதல் படமான ‘தி லெஜண்ட் ‘ கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சனங்களை சந்தித்தாலும், வசூல் ரீதியாக ஒரு கலக்கு கலக்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

தான் நடித்த முதல் படத்திலே இந்த அளவுக்கு விமர்சனங்களை சந்தித்து விட்டோம் அடுத்த படத்தில் இது நடக்காமல் இருக்கவேண்டும் நம்மளுடைய நடிப்பை பார்த்து ஆச்சரிய படவேண்டும் என்று யோசித்து லெஜண்ட் சரவணன் கொடி, கருடன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் துறை செந்தில் குமாரை அணுகி ஒரு அதிரடியான கதையை கேட்டு அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.

இந்த படத்திற்காக தயாராகியுள்ள லெஜண்ட் சரவணன் மிரட்டல் லுக் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த அளவுக்கு கையில் துப்பாக்கியுடனும், முரட்டு தனமாகவும் இருக்கிறார். இவருடைய லுக்கை பார்த்தே கண்டிப்பாக படம் பெரிய அளவில் பேசப்பட போகிறது என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். மேலும், சிலர் இது நம்ம லெஜண்ட் சரவணன் அண்ணாச்சியா? எனவும், அண்ணாச்சி லுக்கே பயங்கரமாக இருக்கு எனவும் கூறி வருகிறார்கள். படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே, காமெடியான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு இருந்த சூரியை கருடன் படத்தின் மூலம் ஒரு ஆக்சன் ஹீரோவாக மாற்றிய துரை செந்தில் குமார் கண்டிப்பாக லெஜண்ட் சரவணன் அண்ணாச்சியையும் ஆக்சன் ஹீரோவாக மாற்ற போகிறார் என படத்தின் லுக்கை வைத்து பார்த்தாலே தெரிகிறது. படம் எப்படி வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Recent Posts

‘இரவு முழுவதும் அழுதேன்’ ..! இந்தியா தோல்வியை நினைவு கூர்ந்த கவுதம் கம்பீர் !

கவுதம் கம்பீர் : கடந்த 2007 ம் ஆண்டுக்கு பிறகு 17 வருடங்கள் கழித்து இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி…

15 hours ago

புனேவில் வேகமெடுக்கும் ஜிகா வைரஸ்.. கர்ப்பிணிக்கும் தொற்று பரவல்.! முழு விவரம்..

மகாராஷ்டிரா : புனேவில் ஏடிஎஸ் கொசு மூலம் பரவும் ஜிகா வைரசால், மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 2 கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ்…

15 hours ago

மகளிருக்கான TN-RISE.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கம்.!

சென்னை: மகளிருக்கான தமிழக அரசின் புதிய திட்டமான TN-RISE நிறுவனத்தை தொடங்கினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மகளிர் தொழில் முனைவோர் நலன் கருதி அவர்களுக்கு தேவையான தொழில்…

15 hours ago

டி20 உலகக்கோப்பையில் படைக்கப்பட்ட புதிய சாதனைகள் …! பட்டியலை வெளியிட்ட ஐசிசி..!

ஐசிசி : கடந்த ஜூன் மாதம் 2 தேதி முதல் ஜூன் 29 தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வந்த 20 உலகக்கோப்பை…

15 hours ago

ஜஸ்ட் மிஸ்!! ஸ்கூட்டி மீது வேகமாக மோதிய கார்.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்.!

வைரல் வீடியோ : நாடு முழுவதும் நிகழும் சாலை விபத்துகள் சொல்லி தெரிய வேண்டியவை இல்லை. இந்த விபத்துக்களை தடுக்க நாம் சாலை விதிகளை கடைபிடித்தாலே போதுமானது.…

15 hours ago

இனி பாஜக ஆட்சி தான்.. கேரளாவிலும் தொடங்கிவிட்டோம்.! லிஸ்ட் போட்ட பிரதமர் மோடி.!

டெல்லி: கடந்த 3 தேர்தல்களில் 100ஐ கூட தாண்டாத காங்கிரஸ் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இனி வரும் தேர்தல்களிலும் பாஜக கூட்டணியே வெல்லும்…

16 hours ago