காலரை தூக்கிவிட்டு சொல்றேன்.. HATS OFF TO OUR CM முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – நடிகர் சத்யராஜ்

சமீபத்தில் ஒரு புன்னகை என்னை மிகவும் கவர்ந்தது. அது சட்டசபையில் நமது தமிழக முதல்வர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் புன்னகை என நடிகர் சத்யராஜ் பேச்சு. 

நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், ஆளுநர்  உரை குறித்தும், ஆளுநரின் செயல்பாடு குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை முன்வைத்தார். இதனையடுத்து, முதல்வர் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.

இதுகுறித்து நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மனிதனுக்கு அழகு சிரிப்பே. சிரிப்பை விட புன்னகை. சமீபத்தில் ஒரு புன்னகை என்னை மிகவும் கவர்ந்தது. அது சட்டசபையில் நமது தமிழக முதல்வர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் புன்னகை.

அந்த புன்னகையில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் புன்னகை சுடர் விட்டது. பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயம் பழிச்சிட்டது. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி கிளர்ந்து எழுந்தது. தமிழ்நாட்டு என்னும் நாட்டில் வாழும் ஒரு சாதாரண குடிமகனாக அந்த புன்னகையில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். காலரை தூக்கிவிட்டு சொல்றேன்.. HATS OFF TO OUR CM முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment