குழந்தைகளுக்கு நற்செய்தி..புதிதாக உருவாக்கப்படும் இரண்டு பூங்காக்கள்..! பிஎம்சி அறிவிப்பு..!

மும்பையில் புதிதாக இரண்டு பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளது. 

மும்பையில் சண்டிவலி மற்றும் குர்லாவில் இரண்டு புதிய பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளதாக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (Brihanmumbai Municipal Corporation-BMC) தெரிவித்துள்ளது. சண்டிவிலியில் உள்ள சங்கர்ஷ் நகரில் உள்ள ஒதுக்கப்பட்ட நிலம் பூங்காவாக மாற்றப்படவுள்ளதாகவும், அதே நேரத்தில் குர்லா மேற்கில் உள்ள மக்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காந்தி மைதானத்தை மேம்படுத்த உள்ளதாகவும், பிரிஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) தெரிவித்துள்ளது.

இதனை மேம்படுத்த ரூ.5.36 கோடி செலவில் விரைவில் பணிகள் தொடங்க உள்ளது. சங்கர்ஷ் நகரில் உள்ள நிலம் சுமார் 8,093 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் உருவாக்கப்படும் பூங்காவில் கிரிக்கெட், கபடி, கைப்பந்து போன்றவற்றுக்கு தேவையான உபகரணங்களும் வசதிகளும் அங்கு செய்து தரப்படும். குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதியும், நடைபாதையும் இருக்கும் என்று பிஎம்சி தெரிவித்துள்ளது.

மக்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காந்தி மைதானமும் மேம்படுத்தபடும் என்றும் இந்த இரண்டு பூங்காக்களிலும் முறையான விளக்கு அமைப்புகள் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, ஒப்பந்ததாரருக்கு பணியை தொடங்க உத்தரவு பிறப்பித்து, விரைவில் மேம்படுத்தும் பணியை தொடங்கவுள்ளதாகவும், இந்த பணிகள் 11 மாதங்களில் முடிக்கப்படும் என்றும் பிரிஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

Leave a Comment