காசா மருத்துவமனை தாக்குதல் – ஆதாரங்களை வெளியிட்டது இஸ்ரேல்!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர் கடந்த 7ம் தேதி தொடங்கி இன்று`13வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த சூழலில், காசாவில் உள்ள அல் – அஹ்லி அரபு மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் மிகப்பெரிய கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதல் உலகம் முழுவதும் இருக்கும் மக்களை உலுக்கி உள்ளது. இப்படி ஒரு மனிதபிமானமற்ற செயலை எப்படி செய்ய முடியும் என்ற கேள்வி பலர் எழுப்பி வருகின்றனர்.

மருத்துவமனை மீதான தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 4 ஆயிரம் பேர் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த தாக்குதல் போர்குற்றம், இனப்படுகொலை என ஐக்கிய நாடு சபை உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டங்களை தெரிவித்தனர். மருத்துவமனை மீதான குண்டுவீச்சில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என கூறப்படுகிறது.

காசா மருத்துவமனையின் மீது இஸ்ரேல் தாக்குதல்… 500 பேர் உயிரிழப்பு..!

மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு, இஸ்லாமிக் ஜிகாத் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், மருத்துவமனை மீது யார் தாக்குதல் நடத்தியது என கேள்வி எழுந்தது.  இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள அல் – அஹ்லி அரபு மருத்துவமனை தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்புதான் காரணம் என்பதற்கான ஆதாரங்களை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ராக்கெட் தாக்குதல் தொடர்பான 2 பயங்கரவாதிகள் உரையாடிய ஆடியோ பதிவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. ராக்கெட்டின் பாதை பகுப்பாய்வு மருத்துவமனைக்கு அருகில் இருந்து ஏவப்பட்டது உறுதிப்படுத்துகிறது இஸ்ரேல். இதனிடையே, இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போர் குறித்து அதிபர் நெதன்யாகு உடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஹமாஸ் வேறு வகையான எதிரி என்பதால் இது வேறு வகையான போராக இருக்கும்.

இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா அளிக்கும்.! ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு.!

பொதுமக்களின் உயிரிழப்புகளை குறைக்க இஸ்ரேல் முற்படும் அதே வேளையில், பொதுமக்களின் உயிரிழப்புகளை அதிகப்படுத்த ஹமாஸ் முயற்சி செய்கிறது. ஹமாஸ் இஸ்ரேலியர்களைக் கொல்ல விரும்புகிறது,  பாலஸ்தீன மக்களின் உயிர்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. ஒவ்வொரு நாளும் அவர்கள் இரட்டைப் போர்க் குற்றத்தைச் செய்கிறார்கள். எங்கள் பொதுமக்களைக் குறிவைத்து, அவர்களின் பொதுமக்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, பொதுமக்களிடையே தங்களை மறைத்து, அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்கள்.

கடந்த 11 நாட்களில் ஹமாஸ் நிகழ்த்திவரும் இந்த கொடூரமான இரட்டைப் போர்க்குற்றத்தின் விலையை நாம் பார்த்தோம். இஸ்ரேல் சட்டப்பூர்வமாக பயங்கரவாதிகளை குறிவைப்பதால், பொதுமக்கள் துரதிருஷ்டவசமாக பாதிக்கப்படுகின்றனர். ஹமாஸ் தான் அனைத்து பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். நேற்று பாலஸ்தீன பயங்கரவாதிகளால் ஏவப்பட்ட ராக்கெட் தவறாகச் சுடப்பட்டு, பாலஸ்தீன மருத்துவமனையில் தரையிறங்கிய பயங்கரமான போர்க்குற்றத்தை பார்த்தோம். எனவே, இந்தப் போரில் நாம் தொடரும்போது, பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க இஸ்ரேல் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றார்.