54 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் எரிவாயு விலை அதிகம்..!

54 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் எரிவாயு விலை அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நாள் தோறும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், சர்வதேச நிதியம் நிர்ணயித்துள்ள டாலரின் உலக சராசரி மதிப்புடன் 54 நாடுகளை ஒப்பிட்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், வளர்ந்த பல நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தான் சமையல் எரிவாயு விலை மிக அதிகளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா பெட்ரோல் விலையில் மூன்றாவது  இடத்திலும், டீசல் விலையில் எட்டாவது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.