கென்ய தலைநகரில் எரிவாயு வெடித்து விபத்து…2 பேர் பலி, 200 பேர் காயம்.!

கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் எரிவாயு வெடித்ததில் குறைந்தது இரண்டு பேர் பலியாகியதாகவும், குறைந்தது 200 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நைரோபியின் எம்பகாசி மாவட்டத்தில் உள்ள எரிவாயு நிரப்பும் ஆலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதன் கட்டிடம் மோசமாக சேதமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஐசக் மைகுவா மவாரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூடுதல் தகவலாக, 1 பிப்ரவரி 2024, இரவு சுமார் 11:30 மணியளவில் கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி ஒன்று வெடித்து சிதறியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின்போது, ஆடைகள் மற்றும் ஜவுளிகள் விற்பனை செய்யும் குடோன் எரிந்து நாசமாகியது.

மேலும், இந்த விபத்தில் நைரோபி வெஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு சக கென்யா நாட்டினர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் நைரோபி வெஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு சக கென்யா நாட்டினர் உயிரிழந்துள்ளனர்.

புளோரிடாவில் பூங்கா மீது மோதி சிறிய ரக விமானம் விபத்து!

அது மட்டும் இல்லாமல், 222 கென்யா நாட்டை சார்ந்தவர்கள்  தீ விபத்தில் காயமடைந்து, பல்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment