மகாராஷ்டிராவில் ஆகஸ்ட் -15 ஆம் தேதி முதல் அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை..!

மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அதற்கான செலவை மாநில அரசே ஏற்கும் என்றும் மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் தானாஜி சாவந்த் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இலவச சிகிச்சை அழிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,  மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும், ஆரம்ப சுகாதார நிலையம், கிராமப்புற மருத்துவமனைகள், மகளிர் மருத்துவம், மாவட்ட பொது மருத்துவமனைகள், பல்நோக்கு மருத்துவமனைகள், புற்றுநோய் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மகாராஷ்டிரா மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஒவ்வொரு ஆண்டும் 2.55 கோடி மக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.  மாநிலத்தில் மொத்தமாக மாநிலத்தில் 2,418 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.