முதல்வரின் வெளிநாட்டு பயணம்… எந்தெந்த நாடுகளுக்கு.? எப்போது தொடக்கம்.? 

கடந்த வருடம் மே மாத இறுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் , ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். தமிழகதிற்கு 1 டிரில்லியன் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க  முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இந்த வருட தொடக்கத்தில் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் பல்வேறு  தொழில் முதலீடுகளை கொண்டுவர பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டன. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் முதல்வர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!

இந்த முறை ஜனவரி 28ஆம் தேதி முதல்வர் தனது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள உள்ளார். 10 நாட்கள் வரையில் இந்த பயணம் இருக்கும் என்றும், ஸ்பெயின், துபாய், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு முதல்வர் பயணிக்க திட்டமிட்டுளளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கண்ட நாடுகளுக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் , நேரடியாக அங்குள்ள நிறுவனங்களை பார்வையிட உள்ளார் . அதன் பிறகு அந்நாடுகளில் நடைபெறும் கருத்தரங்குகளில் பங்குபெறுகிறார் . தொழிலதிபர்களை நேரில் சந்தித்து பேசி தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்க உள்ளார் எனவும், பிப்ரவரி 5ஆம் தேதிக்கு பின்னர் முதல்வர் தமிழகம் திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.