கோதுமை ஏற்றுமதிக்கான தடை நீடிக்கும்.. காரணம் இதுதான்.! இந்திய உணவு கழக தலைவர் பேட்டி.!

கோதுமை ஏற்றுமதிக்கான தடை நீடிக்கும் என இந்திய உணவு கழக தலைவர் அசோக் கே.மீனா பேட்டியளித்தார்.

கோதுமை உற்பத்தி உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் உள்நாட்டு உற்பத்தி இலக்கை எட்டவில்லை என்றும் கடந்த வரும் மத்திய அரசு கோதுமையை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதை தடை விதித்து இருந்தது .

கோதுமை தடை :

இந்த தடை நீடிக்குமா என்பது குறித்து இந்திய உணவு கழக தலைவர் கே.மீனா கூறுகையில், இந்த தடை நீடிக்கும் என்றே கூறினார். அதாவது, உள்நாட்டில் கோதுமை புழக்கத்தில் தட்டுப்பாடு இல்லை என்கிற நிலை வரும் வரை கோதுமை ஏற்றுமதிக்கு தடை தொடரும் என தெரிவித்தார்.

10,727 டன் கோதுமை :

மேலும், சமீபத்திய மழையின் காரணமாக கோதுமை விளைச்சல் பாதிக்கப்படாது. என்றும், கோதுமை கொள்முதல் நாடுமுழுவதும் ஆரம்பமாகிவிட்டது என்றும், மத்திய பிரதேசத்தில் மட்டுமே 10,727 டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு உற்பத்தி இலக்கை எட்டி விடுவோம் எனவும் இந்திய உணவு கழக தலைவர் கே.மீனா கூறினார்.

Leave a Comment