FIFA WorldCup2022: ஸ்பெயின் அணிக்கு எதிராக ட்ரா செய்த ஜெர்மனி.!

ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பையில் ஸ்பெயின்-ஜெர்மனி மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது.

கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் குரூப்-E வில் இடம்பெற்ற ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதிய ஆட்டம் அல்-பெய்த் ஸ்டேடியத்தில் நள்ளிரவு 12.30க்கு நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் 0-0 என்ற  சமநிலையில் முடிந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஸ்பெயின் அணிக்காக மாற்று வீரராக களமிறங்கிய அல்வரோ மொராட்டா போட்டியின் 62 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஸ்பெயின் அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார். அதன்பிறகு ஜெர்மனி அணியின் நிக்லாஸ் ஃபுல்க்ரக், ஆட்டத்தின் 83ஆவது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடித்தார்.

இதனால் இந்த ஆட்டம் 1-1 ன்ற கோல் கணக்கில் ட்ராவில் முடிந்தது. ஜெர்மனி அணிக்கு, இந்த ஆட்டம் ட்ராவில் முடிந்ததால் குரூப்-E வில் ஒரு புள்ளி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில தொடர்கிறது. ஸ்பெயின் அணி 4 புள்ளிகளுடன் குரூப்-E வில் முதலிடம் வகிக்கிறது.

Leave a Comment