முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி 3 வது நாளாக தீவிரம்..!

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரான சைதை துரைசாமி அவர்களின் மகனான வெற்றி துரைசாமியின் கார் கடந்த ஞாற்றுகிழமை அன்று விபத்துக்குள்ளானது. கடந்த ஞாயிறு அன்று ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கின்னூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில்  கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள சட்லஜ் எனும் நதியில் விழுந்து  விபத்துக்குள்ளானது.

நீட்டை யாராலும் ஒழிக்க முடியாது – பாஜக தலைவர் அண்ணாமலை..!

நடந்த இந்த கோர விபத்தில் கார் ட்ரைவர் உட்பட கோபிநாத் மற்றும் சைதை துரைசாமியின் மகனும் ஆகிய வெற்றியும் உள்ளே இருந்தனர். அதில் அந்த கார் ட்ரைவர் விபத்து நடந்த அன்று சடலமாக மீட்கப்பட்டார். பின் அதிலிருந்த கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியை மட்டும்  விபத்து நடந்த இடத்தில் காணவில்லை, இதனால் இரண்டு நாட்களாக அவரை தேடும் பணி தீவிரம் அடைந்திருந்தது. தற்போது மூன்றாவது நாளான இன்றும் வெற்றியை தேடும் பணியை தீவிர படுத்தியுள்ளனர்.

விபத்து நடந்த இடத்திலிருந்து 15 கி.மீ சுற்றளவில் தேடும் பணி நடைப்பெற்று வருகிறது. தற்போது, இன்று காலை விபத்து நடந்த இடத்தில் அவரது ஐ-போனை மீட்பு குழுவினர் கைப்பற்றி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதை கைப்பற்றி அவர் கடைசியாக யாரிடம் பேசினார், என்னென்ன பேசினார் என்னும் தகவலையும் சேகரித்து வருகிறார்கள்.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், இந்தோ திபத்திய வீரர்கள், ராணுவ படை வீரர்கள் என கிட்டத்தட்ட 100 வீரர்கள் இந்த தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இன்று மதியம் இந்திய கடற்படையில் நீச்சல் திறன் பெற்ற வீரர்களும் இந்த தேடுதலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Leave a Comment