பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைத்த ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானது..! ஆண்ட்ரே வோரோபியோவ்

மாஸ்கோ அருகே பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைத்த ஆளில்லா விமானம் (ட்ரோன்) விபத்துக்குள்ளானது.

ஆளில்லா விமானம் விபத்து :

ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவிற்கு அருகில் உள்ள எரிவாயு நிலையத்திற்கு அருகே ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் எந்த வித பொருள் சேதமும், உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. விபத்து நடந்த பகுதிக்கு அவசரகால சேவைகள் மற்றும் வெடிகுண்டு படைகள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Drone crashes 1
Drone crash [Representative Image]
உள்கட்டமைப்பை குறிவைத்துள்ளது :

இந்த விபத்து குறித்து மாஸ்கோ பிராந்திய கவர்னர் ஆண்ட்ரே வோரோபியோ கூறுகையில், “அடையாளம் தெரியாத ஆளில்லா விமானம் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள கொலோம்னா பகுதியில் உள்ள குபாஸ்டோவோ கிராமத்திற்கு அருகில் பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைத்ததாகத் தெரிகிறது” என்று கூறினார்.

Moscow regional governor Andrey Vorobyov
Moscow regional governor Andrey Vorobyov [File Image]
ஆளில்லா விமானத் தாக்குதல்கள் :

இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு நிறுவனங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். முன்னதாக உக்ரைன் எல்லையில் ரஷ்யாவில் உள்ள பகுதிகளை குறிவைத்து கடந்த இரண்டு நாட்களாக பல ஆளில்லா விமான தாக்குதல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Drone crashes
Drone crashes and strikes [Representative Image]

Leave a Comment