AK 61 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகிறது தெரியுமா.?

நடிகர் அஜித்குமார் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ” AK61″ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்புராயனும், சுப்ரிம் சுந்தரும் பணியாற்றி வருகிறார்கள்.

படத்தில் நடிகை மஞ்சுவாரியர், நடிகர் சமுத்திரக்கனி, நடிகர் வீரா என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஆனால் இதற்கான அறிவிப்பு கூட இன்னு, வெளியாகவில்லை. வலிமை படத்தை போலவே இந்த படத்திற்கும் அப்டேட் கொடுக்காததால் ரசிகர்கள் சோகத்துடன் அப்டேட் கேட்டு வருகிறார்கள்.

படத்திற்கான படபிடிப்பு  ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்றுவந்தது வந்த நிலையில், அங்கு இன்னும் சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்படவுள்ளது. அது முடிந்த பிறகு, அடுத்த கட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெறவுள்ளது.

 

இந்த நிலையில், தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவும் தேதி  குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, “AK61” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏனென்றால், ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி மறைந்த நடிகையும், படத்தின் தயாரிப்பாளர் போனிகபூருடைய மனைவியுமான ஸ்ரீதேவியின் பிறந்தநாள் என்பதால் அந்த தினத்தில் “AK 61” படத்தின் தலைப்பை பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியீட போனிகபூர் திட்டமிட்டுள்ளதாக நம்ம தகுந்த சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள். விரைவில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

ஜஸ்ட் மிஸ்! பாம் பிளாஸ்ட்லிருந்து தப்பித்த விஜய்..பயந்து நடுங்கிய சம்பவம்!

சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார். சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு…

3 mins ago

TIDCO அட்டகாச அறிவிப்பு… குலசையில் புதிய விண்வெளி பூங்கா.!

சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…

9 mins ago

என்னதான் குறைந்தாலும் சந்தோசமே இல்லை! குறைந்தது தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…

29 mins ago

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…

38 mins ago

தமிழகத்தில் மின்சார தேவையை குறைத்த கனமழை ..! மின்சார துறை ஹாப்பி ..!

சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…

46 mins ago

பழசை மறந்திருந்தோம்.. பிரதமர் நினைவூட்டினார்.. தமிழிசை போட்ட லிஸ்ட்.!

சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…

1 hour ago