சாப்பிட்ட உடனே இதெல்லாம் பண்றீங்களா? இனிமே இந்த தப்பை பண்ணாதீங்க….

உணவு எடுத்துக் கொண்ட பிறகு சில விஷயங்களை செய்தால் நம் உடலின் ஆரோக்கியம் பாதிப்படையும். அது என்னவென்றும் ஏன் செய்யக்கூடாது என்றும் இந்த பதிவில் பார்ப்போம்.

சாப்பிட்ட உடனே தூக்கம் வருவது இதனால்தானா .. 

நம் கண் விழித்திருக்கும் போது நமது மூளையின் செயல் திறன் அதிகமாக இருக்கும். இதுபோல் நாம் சாப்பிட்டு முடித்த பின் இரைப்பைக்கு ரத்த ஓட்டம் அதிகமாக செல்லும். அந்த நேரம் மூளையின் ரத்த ஓட்டம் குறைக்கப்படுகிறது. இதுவே தூக்கம் வர காரணமாகிறது.

சாப்பிட்ட பின் பத்து நிமிடங்கள் நேராக அமர்ந்து உட்கார்ந்தால் செரிமானம் எளிதாக்கப்படும். இதுவே படுத்திருந்தால் மிகவும் தாமதமாக  செரிமானமாகும். இதை அடிக்கடி செய்யும்போது உணவு குழாய் வீக்கம், அசிடிட்டி போன்றவை ஏற்படும். குறிப்பாக தொப்பை வருவதற்கு முதல் காரணம் இது தான். சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து தான் படுக்க வேண்டும்.

வெள்ளை முடி உங்களுக்கு அதிகமா வருதா? அப்ப இந்த பதிவை படிங்க.!

சாப்பிட்ட பின் ஏன்  டீ குடிக்க கூடாது தெரியுமா ?

டீ  யில் டானின் என்ற  ரசாயனம் உள்ளது. இது நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள புரோட்டின், அயன் ,கால்சியம் போன்ற சத்துக்களை சரியாக உடலில் சேரவிடாமல் செய்யும். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். குறிப்பாக இரும்பு சத்து குறைபாடு ,தோல் வியாதி போன்றவை ஏற்படும் எனவே ஒரு மணி நேரம் கழித்து டீ குடிக்கலாம்.

குளித்த பின் ஏன் சாப்பிட கூடாது ?

நாம் குளிக்கும்  போது கை, கால் போன்ற உறுப்புகளும் வேலை செய்யும் இதனால் வயிற்றிற்கு ரத்த ஓட்டம் செல்வது குறைக்கப்படுகிறது. இது  செரிமான பிரச்சனைக்கு வழிவகுக்கும். எனவே குளித்த  பின் சாப்பிடுவதே  சிறந்தது அல்லது ஒரு வேலை சாப்பிட்டு விட்டால் குளிப்பதற்கு ஒரு அரை மணி நேரமாவது கழித்து குளிக்கலாம் .

சாப்பிட்ட உடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாமா? கூடாதா?

உணவு அருந்தி 15 நிமிடம் கழித்து தான் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதேபோல் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போதும் உணவு அருந்திவிட்டு உடற்பயிற்சி மேற்கொள்ளக்கூடாது. பல நோய்களுக்கு நாம் உள்ளாவது சாப்பிட தெரியாமல் சாப்பிடுவதுதான்.

ஆகவே நமக்கு செரிமான தொந்தரவுகள் ஏற்படாமல் இருக்க இந்த வழிமுறைகளை பின்பற்றி உணவை எடுத்துக் கொள்வது நல்லது.