மிக்ஜாம் புயலில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.! நாடாளுமன்றத்தில் டிஆர் பாலு கோரிக்கை.!

2023ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முதல் துவங்கி இன்று இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் மக்களவையில் பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்தும், மத்திய அரசு தமிழகத்திற்கு உடனடியாக உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

அவர் கூறுகையில், வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.கடந்த 3 நாட்களாக மக்கள் வீடுகளுக்குள் இருக்கும் நிலை ஏற்பட்டது. மிக்ஜாம் புயல் மக்களை கடுமையாக பாதித்துள்ளளது.

மிக்ஜாம் புயல்… ரூ.5,000 கோடி நிவாரணம்.. வெள்ளம் சீரமைப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

மிக்ஜாம் புயல் காரணமாக சுமார் ஒருகோடிக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். வீதிகளில் ஆறுகள் போல மழைநீர் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழக முதல்வரிடம் மழைநீர் பாதிப்பு குறித்து கேட்டறிந்துள்ளார். அது பாராட்டுக்குரியது. வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய தமிழக முதல்வர் மத்திய அரசிடம் 5000 கோடி ரூபாய் நிதியுதவி கேட்டுள்ளார்.

இந்த நேரத்தில் மத்தியஅரசு தமிழகத்திற்கு உதவ உடனடியாக முன்வர வேண்டும். இதுவரை மிக்ஜாம் புயல் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தை பேசுவதற்கு முன்னரே மக்களவை அனுமதித்து இருக்க வேண்டும். உடனடியாக தமிழக அரசுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசினார்.