மத்திய இணையமைச்சர் முரளிதரனை சந்தித்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு..!

நேற்று முன்தினம், வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 37 மீனவர்களைக் கைது செய்திருப்பதோடு அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் பறிமுதல் செய்துளளது. 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யுமாறு, ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், இந்த மாதம் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 10 மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, டெல்லியில் மத்திய அமைச்சர் முரளிதரனை திமுக எம்.பி., டி.ஆர்.பாலு அவர்கள் நேரில் சந்தித்தார். அப்போது, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை வைத்ததோடு, மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் மத்திய அமைச்சரிடம் வழங்கினார்.மத்திய அமைச்சருடனான சந்திப்பின்போது, மீனவர்களின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ஆர்.பாலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் கிடைத்ததாகவும், இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 64 மீனவர்கள், 10 படகுகளை விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதுபோன்று சிறைப்பிடிப்பு தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மத்திய அரசை இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நாட்டின் அரசுடன் பேசி உரிய உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தோம் என தெரிவித்துள்ளார்.

Recent Posts

அதிரிச்சியில் ரசிகர்கள்..!! கால்பந்து வீரர் மதிஜா சார்கிச் காலமானார்!!

மதிஜா சார்கிச் : கால்பந்து வீரரான கோல் கீப்பராக விளையாடி வரும் மதிஜா சார்கிச் உடல்நல குறைவால் காலமானார். இங்கிலாந்து நாட்டில் பிறந்த இவர் மாண்டினீக்ரோ தேசிய…

6 seconds ago

உத்தராகண்ட் மாநிலத்தில் வேன் கவிழ்ந்து விபத்து! 8 பேர் பலி!!

உத்தராகண்ட் : மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஆற்றில் வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ரைடோலி அருகே ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் 23-க்கும்…

15 mins ago

சிறகடிக்க ஆசை இன்று.. புதிய தொழிலதிபர் ஆகும் விஜயா..

சிறகடிக்க ஆசை -விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான [15 ஜூன் ] விறுவிறுப்பான காட்சிகளை இந்த பதிவில் காணலாம். முத்து தினேஷை…

2 hours ago

மக்களவை வெற்றியை ருசித்த திமுக.. கோவையில் முதலமைச்சர் – களைகட்டும் முப்பெரும் விழா.!

கோவை : திமுகவின் முப்பெரும் விழா இன்று கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறவிருக்கும் திமுகவின்…

2 hours ago

மிஷ்கின் ஒரு சைக்கோனு நினைச்சேன்! விஜய் சேதுபதி ஓபன் டாக்!

விஜய் சேதுபதி : நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக அவர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி…

2 hours ago

ஆண்ட்ராய்டாக மாறும் ஆப்பிள்? அம்சங்களை காப்பி அடித்த ஆப்பிள் ..என்னென்ன தெரியுமா?

ஆப்பிள் iOS 18: 2024ம் ஆண்டிற்கான WWDC இல் ஆப்பிள் iOS 18 பல புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. இந்த அம்சங்களில், பல அம்சங்களை ஆண்ட்ராய்டு-15 இல்…

2 hours ago