இறுதிக்கட்டத்தை எட்டியது திமுக கூட்டணி தொகுதி பங்கீடு! இன்று ஒப்பந்தம் கையெழுத்தா?

DMK alliance: தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மிக விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை மற்றும் பரப்புரை போன்ற தேர்தல் பணியில் மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Read More – அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு.! இன்று விசாரணை…

இம்முறையும் ஆட்சியை தக்க வைக்க பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் பாஜகவை வீழ்த்த வேண்டும் என பல்வேறு வியூகங்களை வகுத்து களத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக கூட்டணி வலுவாக தேர்தலை சந்திக்கவுள்ளது.

திமுகவில் மதிமுக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மமக, கொங்கு நாடு மக்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட சுமார் 8 கட்சிகள் கூட்டணியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக நடத்தி வருகிறது.

Read More – எச்சரிக்கை.! திமுக காணாமல் போகுமா.? பிரதமருக்கு டி.ஆர்.பாலு கடும் கண்டனம்.!

இதுவரை திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு கநாமக்கல் தொகுதியும் வழங்க முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இருப்பினும், மற்ற கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதில் குறிப்பாக விசிக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பெரிய கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தையில் திமுக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Read More – தீ விபத்து ‘வதந்தி’.! அலறி அடித்து ஓடிய பயணிகள்… ரயில் மோதி 2 பேர் பலி.!

அதன்படி, மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைமை அலுவலக்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை ஈடுபட்டுள்ளனர். பேர்ச்சுவார்த்தை குழுவின் தலைவர் டிஆர் பாலு தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதனால், தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment