டி.எம்.சௌந்தரராஜன் சாலையை திறந்து வைத்த முதல்வர்..!

செளந்தரராஜன் வசித்த வீடு அமைந்துள்ள மந்தவெளிப்பாக்கத்தின், மேற்குவட்ட சாலையின் பெயர் டி.எம்.சௌந்தரராஜன் சாலை என மாற்றம்

பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன். காதல், தத்துவம், சோகம், துள்ளல் என எல்லா வகை உணர்வுகளில் 10,000-க்கும் மேற்பட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இதில் சுமார் 3,000 பக்திப் பாடல்கள், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை உயர்த்திப் பிடித்த பாடல்கள் என 40 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வந்தவர். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு காலமானார்

டி.எம். சௌந்தரராஜன் சாலை என பெயர் மாற்றம் 

புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை ஒட்டி, சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்த சாலைக்கு ‘டி.எம். சௌந்தரராஜன் சாலை’ என்ற பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சூட்டியுள்ளார்.

தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சாலையின் பெயர் பலகையை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Leave a Comment