குங்கும்வல்லி தான்தோன்றீஸ்வரர் தாயாருக்கு வளைகாப்பு திருவிழா..!

திருச்சி உறையூர் குங்குமவல்லி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் வளையல் காப்பு திருவிழாவானது நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கதாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான வளையல் காப்பு திருவிழாவானது நேற்று தொடங்கியது.

இதில் காலை 7.30 மணிக்கு கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி அம்பிகையிடம் பிரார்த்தனை செய்யப்பட்டு அதற்கான ஹோம பூஜையும்  நடைபெற்றது.இதனை தொடர்ந்து மதியம் 1 மணியளவில் வளைகாப்பு சம்பிரதாய பூஜைகள் ஆனது நடந்தது.

தாயார் குங்குமவல்லி அம்மனுக்கு வளையல்கள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் மேலும் தாயார்க்கு சிறப்பு பூஜையானது நடைபெற்றது. இந்த வளைகாப்பு திருவிழாவில் திரளான கர்ப்பிணிகளும், பெண் பக்தர்களும் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருளாசி பெற்றனர்.இதன் பின்னர் பூஜை முடிந்ததும் 48 நாள் அர்ச்சிக்கப்பட்ட வளையல், குங்குமம் மற்றும் அம்பாள் படம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு குழந்தை பாக்கியம் வேண்டி ஹோமமானது  நடைபெறகிறது.பகல் 12 மணிக்கு 48 நாள் அர்ச்சிக்கப்பட்ட வளையல், குங்குமம், அம்பாள் படம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை திருமணம் வேண்டி ஆண்- பெண் என இருபாலருக்கும் மாங்கல்ய பாக்கியம் வேண்டியும் , மேலும் சுமங்கலிகளுக்கும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு நாளை பகல் 1 மணிக்கு திருமண தடை நீங்கி விவாகம் நடக்க மற்றும் மாங்கல்ய பாக்கியத்துடன் வாழ வேண்டி சிறப்பு பூஜையானது நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கருணாமூர்த்தி, கோவில் ஸ்தானிகர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Leave a Comment