ஞானவாபி மசூதியில் ஆய்வை தொடங்கிய தொல்லியல் துறை..!

த்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில், தொல்லியல் துறை ஆய்வு நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி, மசூதியில் ஆய்வுக்கு அனுமதிக்க கூடாது என்ற இஸ்லாமிய அமைப்பு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சில நிபந்தனைகளின் கீழ் ஞானவாபி மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து முஸ்லிம் தரப்பு முடிவு செய்யும் என அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் (ஏஐஎம்பிஎல்பி) உறுப்பினர் மௌலானா காலித் ரஷீத் ஃபராங்கி மஹாலி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றவை தொடர்ந்து, தற்போது  ஞானவாபி மசூதியில், தொல்லியல் துறை ஆய்வை தொடங்கியுள்ளது. தற்போது ஞானவாபி மசூதியில், தொல்லியல் துறை ஆய்வாய் தொடங்கியுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.